Friday, December 16, 2011

தொழுகையின் சிறப்பினைப் பற்றி சொல்ல தொழுகையின் அருமையினை விளங்க வையுங்கள்

  உங்களுக்கு தொழ வைக்கும்  முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள் என்பதனை பல இடங்களில் மற்றும் பள்ளிவாசல்களிலும் பார்க்கின்றோம் . இதன் பொருள் உங்களுக்கு இறப்பு(ஜனாஸா தொழுகை) தொழுகை வைப்பதற்கு முன் இறைவனை தொழ ஆரம்பித்து விடுங்கள்.இது நல்ல அறிவுரையாக இருந்தாலும் மனிதனை அச்சமூட்டி எச்சரிக்கை  செய்து தொழ வைக்க முயலும் செயலாக அமைந்து விடுகின்றது. இதைவிட தொழுகையின் அருமையினையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களயும்   மக்களிடம் எடுத்துச் சொல்பது சிறப்பாக இருக்கும் . 



  மனதை வருடி விடுங்கள். இக்கால மக்கள்   (சிலர்) மனதில்  அனைத்து வகை இன்ப துன்பங்களைக் கண்டு அலுத்துப் போய் சுவனத்தின் மாண்பினையும் நரகத்தின் வேதனைப் பற்றியும் சிந்திக்க மனமில்லாதவர்களாய் மாறிவருகின்றனர்.
தொழுகை
யின் சிறப்பினைப்  பற்றி சொல்ல  எதனையோ ஹதீஸ்களும் குரான் ஆயத்துகளும் இருக்கிறது. குடிகாரனை வெறுக்காதீர்கள் குடிப்பதை தடுக்க வழி சொல்லுங்கள் . குடிப்பவனும் தொழுகையை நாடிவிட்டால் குடிப் பழக்கம் அவனை விட்டு ஓடிவிடும் .அவரையும் அன்போடு தொழ அழைத்துச் செல்லுங்கள். இக்கால குந்தைகளுக்கு அடித்து பாடம் சொல்லித் தருவதில்லை மாறாக கல்வி மேல் ஆர்வம் உண்டாக்கி பயிற்சி கொடுத்து வளர்கின்றார்கள். 
ஆர்வம் உண்டாக்கி தொழுகையின் அருமையினை விளங்க வையுங்கள்.
 யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையின் சிறப்பு 



ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

721. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பு) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். ஸுபுஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் அதற்காக வந்து சேர்வார்கள். முதல் வரிசையின் சிறப்பை அவர்கள் அறிந்தால் (போட்டி ஏற்படும் போது) சீட்டுக் குலுக்கி (யார் முதல் வரிசையில் நிற்பது என்பதை)த் தீர்மானிப்பார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
843. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்" என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்'. என்று விளக்கம் தந்தார்கள்.
     
 
குர்ஆன்   2:110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
20:132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.

55:78. மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.
70:23. (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
Source : http://www.tamililquran.com/bukhariindex.asp

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails